Skip to main content

Posts

Showing posts from July, 2016
PGTRB விரைவில்- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக்கிடக்கும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.  இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது.அதுபோல அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 450 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது. by   கல்விச் செய்தி  Email This BlogThis! ...